/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடைமடைக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்டு உறுதி செய்த அதிகாரிகள்
/
கடைமடைக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்டு உறுதி செய்த அதிகாரிகள்
கடைமடைக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்டு உறுதி செய்த அதிகாரிகள்
கடைமடைக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்டு உறுதி செய்த அதிகாரிகள்
ADDED : ஆக 10, 2025 12:47 AM
பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால், குமாரபாளையம் தாலுகா பகுதியில் களியனுார், சமயசங்கிலி, எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சின்னார்பாளையம், தெற்கு பாளையம் உள்ளிட்ட, 25 கி.மீ., சுற்றளவுக்கு செல்கிறது. ஆண்டுதோறும் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வரும்போது, 10,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வரும்போது, கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில், கடந்த மே மாதம் சிறப்பு துார்வாரும் திட்டத்தின் கீழ், குமார பாளையம் தாலுகா பகுதியில் செல்லும் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலின் பிரதான மற்றும் கிளை வாய்க்கால், 24.95 கி.மீ., துாரத்திற்கு, 38 லட்சம் ரூபாயில் துார்வாரும் பணி நடந்தது.
அதை தொடர்ந்து, கடந்த ஜூன், 30ல் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை, 1ல் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, சென்னை திட்ட உருவாக்கம் இணை தலைமை பொறியாளர் குமரன் தலைமையில் அதிகாரிகள், துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்ட பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால் வழியாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக செல்கிறதா என, ஆய்வு செய்து உறுதி செய்தனர்.