/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
/
வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 25, 2025 01:02 AM
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் நடந்து வரும் சாலை, வடிகால் கட்டும் பணிகளை, நகராட்சி தலைவர் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் ஆவாரங்காடு, பெரியார் நகர், காந்திபுரம் முதல் வீதி, மற்றும் ஐந்தாம் வீதி ஆகிய பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பல இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல வடிகாலும் பல இடங்களில் அடைத்து காணப்பட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு, வடிகால் அடைப்பு அகற்றப்பட்டு, ஒரு வாரத்திற்கு மேலாக கான்கிரீட் சாலை, வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை, நேற்று முன்தினம் நகராட்சி தலைவர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள் சில குறைகளை தெரிவித்தனர். குறைகளை சரி செய்து, சாலை, வடிகால் பணிகளை மேம்படுத்துவது குறித்து, ஒப்பந்ததாரர்களுக்கு ஆலோசனை வழங்கி, சாலை, வடிகால் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு நகராட்சி தலைவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் ரேணுகா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.