/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் சோதனை
/
ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் சோதனை
ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் சோதனை
ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் சோதனை
ADDED : செப் 22, 2024 06:40 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில், சுகாதாரம் இல்லாத உணவு வகைகள் விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து கலெக்டர் உமா உத்தரவுப்படி, நேற்றிரவு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பழைய கெட்டுப்போன சிக்கன் வகைகள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட மீன், சில்லி வகைகள், 20 கிலோ கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர்.மேலும், தள்ளுவண்டி கடைகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, மறுமுறை பயன்படுத்தக்கூடாது என்றும், போலார் மீட்டர் மிஷின் கொண்டு எண்ணெயின் தரம் பரிசோதிக்கப்பட்டு, தரமற்ற எண்ணெய் கொட்டி அளிக்கப்பட்டது. ஆய்வில் தரமற்ற உணவகத்திற்கு முன்னேற்ற அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.