ADDED : அக் 03, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம், கல்லாங்கு-ளத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 67. அதே பகு-தியை சேர்ந்த இவரது உறவினர் ஆறுமுகம், 59. இவர்கள் இருவரும், மகாளய அமாவாசையான நேற்று, முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக, 'பஜாஜ்' டூவீலரில், நேற்று காலை, மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு, திதி கொடுத்துவிட்டு, காலை, 11:00 மணிக்கு, ஊருக்கு திரும்பினர். டூவீலரை ராஜமாணிக்கம் ஓட்-டினார். மோகனுார் - நாமக்கல் சாலை, கால்-நடை மருத்துவ கல்லுாரி முன் சென்றபோது, பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது.
அதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜமா-ணிக்கம் மீது கார் ஏறி இறங்கியது. அதில் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஆறுமுகம், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.