ADDED : ஏப் 20, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் தொகுதியில், காலை, 6:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கியது.
முதியவர்கள், காலை முதலே ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு போட வந்தனர். பல முதியவர்களை உறவினர்கள் அழைத்து வந்து ஓட்டு போட வைத்தனர்.மேலும், ஓட்டு சாவடியில், 3 சக்கர சைக்கிள் குறைவாக இருந்ததால், பல முதியவர்கள் குச்சியை பிடித்தபடி நடந்து சென்று ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டனர். பல இடங்களில் மாற்றுத்திறனாளி சைக்கிள்கள் இருந்தும் தள்ளி செல்ல பணியாளர்கள் யாரும் இல்லாததால் முதியவர்கள் நடந்து சென்று ஓட்டளித்தனர்.

