sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

/

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை


ADDED : ஜூலை 22, 2024 08:07 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை ; நாமகிரிப்பேட்டை அருகே, சொத்துக்காக மூதாட்டியை கொலை செய்த உறவினர், 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி பஸ் ஸ்டாப்பை சேர்ந்தவர் போதுமணி, 57; கணவர் பூமாலை. இவர் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன்கள் இருவரும் இறந்து-விட்டனர்.

ஒரு மகன் மட்டும் திருமணாகி சில மாதங்களிலேயே இறந்ததால், மருமகள் பாப்பி-ரெட்டிப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று-விட்டார். இதனால், தனியாக வசித்த போதுமணி, தன், 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். கடந்த வாரம், போதுமணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆயில்பட்டி போலீசார், போதுமணியின் மருமக-ளிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்-தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்-படுத்தினர். போதுமணியின் சம்பந்திகளான பாப்-பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயராமன், 54, துளசி, 45, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:தனியாக வசித்து வந்த போதுமணி, தன்னை கவனித்து வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு-வரின் மகனை தத்தெடுத்து சொத்தை அந்த பையனுக்கு தந்து விடுவதாக பேசி வந்துள்ளார். இந்த தகவல் மருமகளின் குடும்பத்திற்கு தெரிய-வந்துள்ளது. போதுமணி, சொத்தை தத்து மக-னுக்கு கொடுத்து விட்டால், தங்கள் மகளுக்கு சொத்து கிடைக்காது என்பதால், அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து, அதே பகு-தியை சேர்ந்த மாணிக்கம் மகன் கலியமூர்த்தி, 40, ஏற்பாட்டில், மேட்டூரை சேர்ந்த கூலிப்படை-யான வெங்கட்ராமன், ஜீவானந்தம் ஆகியோரை, போதுமணியை கொலை செய்ய நியமித்தனர்.கூலிப்படையினர், சம்பவத்தன்று போதுமணி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, துாங்கிக் கொண்டிருந்த போதுமணியை, தலைய-ணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்-ளனர். பின், அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, ஜெயராமன், துளசி, கலியமூர்த்தி ஆகிய மூன்று பேரையும் ஆயில்பட்டி போலீசார், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us