ADDED : செப் 29, 2026 05:59 AM
நாமக்கல்; ''தமிழக அரசின் இலவச மகளிர் பயண திட்-டத்தால், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து, தமிழக அரசின் கவ-னத்தை ஈர்க்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல், ஒரு நாள் தனியார் பஸ்கள் ஓடாது,'' என, நாமக்கல் மாவட்ட தனியார் பஸ் உரிமையா-ளர்கள் சங்க தலைவர் ஜோதி
குப்புசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசு, டவுன் பஸ்களிலும், தொலைதுார பஸ்களிலும், பெண்களுக்கு இல-வசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் தனியார் பஸ்கள், கடுமையாக பாதிக்கப்படும். இதனால், இன்று நள்ளிரவு, 12:00 முதல், நாளை நள்ளிரவு, 12:00 மணி வரை, தமிழகம் முழுவதும், ஒரு நாள் பஸ்கள் ஓடாது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பஸ்களும்
ஆதரவு அளிக்கும்,'' என்றார்.
