ADDED : மார் 24, 2025 06:32 AM
ராசிபுரம்: ராசிபுரம் வி.ஐ.பி., நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 41; இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர், தன் டூவீலரில், நேற்று முன்தினம் இரவு ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதேபோல், விபத்து நடந்தபோது அவ்வழியாக வந்த தனியார் பஸ் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது, பஸ்சின் பின்னால் டூவீலரில் வந்து கொண்டிருந்த ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 35, ஜனா, 30, ஆகியோர் மோதினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.