/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சின்ன வெங்காயம் நடவு பணி மும்முரம்
/
சின்ன வெங்காயம் நடவு பணி மும்முரம்
ADDED : ஜூலை 11, 2025 01:49 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் பகுதியில், ஆடி பட்ட சின்னவெங்காய சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.
வெண்ணந்துார், அலவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், மதியம்பட்டி, மின்னக்கல், தேங்கல்பாளையம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றில், சின்ன வெங்காய சாகுபடியும் முக்கியமானது.
வெண்ணந்துார், அலவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று பாசனத்தின் மூலம், சின்னவெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில், நாற்று நடவுக்கு இணையாக, நேரடியாக வெங்காயம் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: சின்ன
வெங்காயம் நடவுக்கு ஏக்கருக்கு, 500 கிலோ விதை தேவைப்படுகிறது. தற்போது விதை வெங்காயம் கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விதை, நடவு, அடியுரம் என நடவு துவங்கும் போதே ஏக்கருக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவடையின் போது விலை கிடைக்காவிட்டால், அதிக நஷ்டம் ஏற்படும். இவ்வாறு தெரிவித்தனர்.