ADDED : செப் 30, 2026 05:43 AM
ராசிபுரம்; ராசிபுரத்தில், செவ்வாய் தோறும் வழக்கமாக கூடும் வாரச்சந்தை, நேற்று நடந்தது. இந்த சந்-தைக்கு ராசிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசா-யிகள், வியாபாரிகள் காய்கறிகள் வாங்கவும் விற்கவும் திரண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, ராசிபுரம் சந்தை மற்றும் உழவர் சந்-தைகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால், அதன் விலை கிலோ, 15 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் நடுத்தர மக்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி வாங்கி சென்றனர்.இந்நிலையில், நேற்று நடந்த வாரச்சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்-பட்ட பல்லாரி ரக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்தது. மொத்த விற்பனை மண்டி-களில், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 60 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்பட்டது. கடந்த காலங்களை விட தற்போது விலை இரு மடங்-காக உயர்ந்துள்ளது.
