/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறப்பு தேவையுள்ள குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி
/
சிறப்பு தேவையுள்ள குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி
சிறப்பு தேவையுள்ள குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி
சிறப்பு தேவையுள்ள குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி
ADDED : டிச 11, 2024 01:39 AM
சிறப்பு தேவையுள்ள குழந்தைகளின்
ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி
நாமக்கல், டிச. 11-
அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு, வட்டார வளமையம் மூலம் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு, ஆன்லைனில் பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம்-2016ல், 21 வகையான குறைபாடுகள் பற்றிய முன்னோட்டம், உடல் சார்ந்த குறைபாடுகள், உணர்திறன் குறைபாடுகள், அறிவுசார் குறைபாடுகள், ரத்தம் சார்ந்த குறைபாடுகள், நாள் பட்ட நரம்பியல் குறைபாடுகள் குறித்து, 7 கட்டங்களாக பயிற்சி நடக்கவுள்ளது. இப்பயிற்சியில், மாநிலம் முழுவதும் ஒன்று முதல், 12ம் வகுப்பு வரை கையாளும் அனைத்து ஆசிரியர்களுக்கும், கற்போர் மேலாண்மை திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் மூலம் பயிற்சி அளிக்கப்படும். முன் திறனறி மதிப்பீடு, பயிற்சி காணொலி, கையேடு, பின் திறனறி மதிப்பீடு என, 4 கட்டங்களாக நடைபெறும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஆசிரியர்கள், 'ஆன்லைன்' மூலம் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான ஆசிரியர்கள் தேர்வு, பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் மாவட்டந்தோறும் செய்து வருகின்றனர்.