/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உயர்கல்வி வழிகாட்டி அறை திறப்பு
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உயர்கல்வி வழிகாட்டி அறை திறப்பு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உயர்கல்வி வழிகாட்டி அறை திறப்பு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உயர்கல்வி வழிகாட்டி அறை திறப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:38 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் உமா திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022ல் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளின் கூட்டு முயற்சியுடன், 'நான் முதல்வன் திட்டம்' தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் உமா திறந்து வைத்து கூறியதாவது:
உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து மாணவ, மாணவியரின் விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப, எந்த வகையான உயர்கல்வி பாடப்பிரிவு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம் என்பது சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., கல்லுாரிகளின் காலி பணியிடங்கள் சார்ந்த விபரங்கள் உயர்கல்வி
கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். விபரங்களுக்கு, கட்டுப்பாட்டு அறையை, 18004251997 என்ற எண்ணிலும், 9788858794 என்ற, 'வாட்ஸாப்' எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.