/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் மதிப்பு கூட்டும் நிலையம் திறப்பு
/
பால் மதிப்பு கூட்டும் நிலையம் திறப்பு
ADDED : செப் 25, 2024 01:37 AM
பால் மதிப்பு கூட்டும் நிலையம் திறப்பு
நா.பேட்டை, செப். 25-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், மூலக்குறிச்சி ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண் தொகுப்பில், பால் மதிப்பு கூட்டும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் குழு சார்பில் இங்கு பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மதிப்பு கூட்டும் நிலையத்தை தொடங்கி வைத்து, லாபம் மற்றும் உபபொருட்கள் குறித்து பேசினார்.உதவி திட்ட அலுவலர் அருண் பிரசாத், தும்பல்பட்டி வார்டு உறுப்பினர் அருணாச்சலம், மாவட்ட வள பயிற்றுநர் ராஜ்குமார், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.