ADDED : ஜூலை 11, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை துணை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மல்லசமுத்திரத்தில், பத்திரப்பதிவு துறை சார்பில் ரூ.197 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள, சார் பதிவாளர் அலுவலகத்தை, நேற்று துணை முதல்வர் உதயநிதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சார்பதிவாளர் வானதி குத்துவிளக்கேற்றி வைத்தார். சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, முதல் பத்திரப்பதிவை பயனாளிக்கு வழங்கினார். மாவட்ட நிர்வாக பதிவாளர் சிவலிங்கம், மாவட்ட தணிக்கை பதிவாளர் சிவக்குமார், டவுன் பஞ்., தலைவர் திருமலை, ஒப்பந்ததாரர் கணேசன், தி.மு.க., நிர்வாகி ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.