/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்வாரியம் தனியார்மயமாக்க எதிர்ப்பு
/
மின்வாரியம் தனியார்மயமாக்க எதிர்ப்பு
ADDED : ஜன 01, 2025 01:40 AM
நாமக்கல், ஜன. 1-
மின்வாரியம் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், டி.என்.இ.பி., எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில உப தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், சண்டிகர், உத்தரபிரதேச மாநிலங்களில் செயல்படும் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், அங்கு மாநில மின்சார தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
டி.என்.இ.பி., எம்ப்ளாயிஸ் பெடரேஷன் திட்ட செயலாளர் சசிகுமார், செயல் தலைவர் தண்டபாணி, பொருளாளர் சக்திவேல், அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க திட்ட செயலாளர் சவுந்தரராஜன், தலைவர் செல்வகுமார், பொருளாளர் அழகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

