/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு
/
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 15, 2025 01:46 AM
நாமக்கல், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில், தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் நலக்கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் - மோகனுார் சாலை லத்துவாடியில், 500 ஏக்கர் பரப்பளவில், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம் அமைந்துள்ளன. இங்கு, ஏராளமான கால்நடை மருத்துவ படிப்பு படிக்கும் மாணவ-, மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளனர். மேலும், லத்துவாடி கிராமத்தில், விவசாயிகள் வேளாண் தொழிலில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமத்தை சுற்றி வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 175 ஏக்கரில் தனியார் நிறுவனம் மூலம், தோல் தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசின் வருவாய் துறையினர், நிலம் அளவீடு செய்துள்ளதாக தெரிகிறது. இப்பகுதியில், வேளாண் தொழில்கள், வழிபாட்டு தலங்கள் அதிகளவில் உள்ளதால், இங்கு, தனியார் நிறுவனத்தின் தோல் தொழிற்சாலை அமைக்க கூடாது. தோல் தொழிற்சாலையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அதிகளவில் பாதிப்புகள்
உண்டாகும்.
உடனடியாக இந்த திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில், வரும், 28ல், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முன், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.