ADDED : டிச 30, 2025 05:03 AM

நாமக்கல்: மல்லசமுத்திரம் அடுத்த உப்புக்கல்காடு பகு-தியில் காஸ் பைப் லைன் வால்வு அமைப்ப-தற்கும், பாறைகளுக்கு வெடி வைப்பதற்கும், அப்-பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்-செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் பகுதியில் உள்ள உப்புக்கல்காடு பகுதியில், 1,000 குடும்பங்கள் வசித்து வரு-கிறோம். தற்போது, எங்கள் ஊர் அருகே, ஐ.ஓ.சி., காஸ் பைப் லைன் அமைப்பதற்கு முதல் கட்ட பணி நடந்து வருகிறது. அப்பணிக்காக பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுகிறது. வெடித்து சிதறும் கற்கள், வீட்டின் மேற்கூரை மீது வந்து விழுகிறது. மேலும், எங்கள் கோவில் அருகே இப்படி நடப்பதால் பக்தர்கள் அச்சத்துடன் கோவி-லுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

