திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவு
திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவு
ADDED : ஜூன் 03, 2026 03:59 AM
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் மதுபாலன், மாநகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட், அங்கு செயல்படும் கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு துாய்மையாக பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ராசிபுரம் தாலுகா, அணைப்பாளையத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், ராசிபுரத்தில், 53.39 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதையடுத்து, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர், 'பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்' என உத்தரவிட்டார்.மேலும், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட், எஸ்.எம்.டி., சாலை அருகில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் கூட்டப்பள்ளி ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், ஆர்.டி.ஓ., லெனின், நகராட்சி ஆணையர் வாசுதேவன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
