/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நம்மாழ்வார்' விருதுக்கு இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
/
'நம்மாழ்வார்' விருதுக்கு இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
'நம்மாழ்வார்' விருதுக்கு இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
'நம்மாழ்வார்' விருதுக்கு இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 22, 2025 02:08 AM
நாமக்கல், 'தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண் விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: அங்கக வேளாண் என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்து உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்
படுத்தல் மூலம் பயிர் பாதுகாப்பு, மண்வளம் பாதுகாப்பு மற்றும் மக்களின் உடல் நலத்தையும் காப்பது. வேளாண் துறை மூலம், 2025--26ம் ஆண்டில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மையை தானும் சிறப்பான முறையில் செய்வதோடு, அதனை பிற விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் விவசாயிகளுக்கு, சிறந்த அங்கக வேளாண் விவசாயிக்கான, 'நம்மாழ்வார் விருது' மாநில அளவில், மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மாநில தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று இயற்கை விவசாயிகளுக்கு, தமிழக அரசால், தலா, இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் சிறந்த உயிர்ம உழவருக்கான, 'நம்மாழ்வார்' விருது வழங்கப்படும். 'நம்மாழ்வார்' விருது பெற விரும்பும் விவசாயிகள் தகுதிகளாக, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை வேளாண்மையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருக்க வேண்டும். முழுநேர இயற்கை உழவராக இருக்க வேண்டும். எந்த விதமான ரசாயன பொருட்களையும் விவசாயத்தில் பயன்படுத்தியிருக்கக் கூடாது. குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.
'நம்மாழ்வார்' விருது பெற விரும்பும் இயற்கை விவசாயிகள், இணைய
தளத்தில் வரும், செப்., 15க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அல்லது நாமக்கல், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.