/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கக வேளாண்மை: நாளை இலவச பயிற்சி
/
அங்கக வேளாண்மை: நாளை இலவச பயிற்சி
ADDED : மே 22, 2025 02:01 AM
மோகனுார் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, 'அங்கக வேளாண்மை' என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம். திட, திரவ நொதித்த இயற்கை எரு பயன்படுத்துதல். அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் முறை, பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், மீன் அமிலம், பண்ணை கழிவுகளான ஆடு, மாடு தொழுவத்தின் கழிவுகள், களைகள்.
கோழி எரு, தென்னை நார்கழிவு, பார்த்தீனிய களைச்செடி ஆகியவை எளிதில் மட்கக்கூடிய கழிவுகளை மறுசுழற்சி செய்ய நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் பயன்படுத்துதல், இயற்கை முறை களை கட்டுப்பாடு குறித்து விளக்கமும், செயல் விளக்கமும் அளிக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். 40 விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286--266345, 266650, 9787788005, 9597746373 ஆகிய தொலைபேசி, மொபைல் எண்ணில் வாட்ஸாப் மூலமோ, வரும், 22 மாலை, 5:00 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.