ADDED : ஆக 17, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் சுல்தான்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் மகன் திவாகர், 25; கோயம்புத்துாரில் வேலை பார்த்து வருகிறார். தற்போது, விடுமுறைக்காக வந்த திவாகர் தன், 'யமாஹா' டூவீலரை, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று காலை, எழுந்து பார்த்தபோது, வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த டூவீலரை காணவில்லை. அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, அதிகாலை, 1:00 மணிக்கு, மர்ம நபர்கள் இருவர் வண்டியை திருடி செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து ப.வேலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.