/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலூர் டவுன் பஞ்., சுங்க வசூல் உரிமம்: குறைந்த நபர்களே வந்ததால் ஏலம் ஒத்திவைப்பு

ADDED : பிப் 01, 2024 03:32 PM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து பகுதியில் சுங்க வசூல் உரிமம் பெற நடத்தப்பட்ட ஏலத்தில், குறைந்த நபர்களே பங்கேற்றதால், தேதி குறிப்பிடாமல் ஏலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட காமராஜர் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, தினசரி சந்தை, வண்டி கேட் உள்ளிட்ட, எட்டு இடங்களில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் பெற, கடந்த ஜன., 22ல் ஒப்பந்த புள்ளி அறிவித்தனர். ஆனால், யாரும் ஏலம் கோரவில்லை. மீண்டும் மறுஏலம், நேற்று காலை, 11:00 மணிக்கு டவுன் பஞ்., அலுவலகத்தில், தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது. அதில், குறைவான நபர்களே கலந்துகொண்டனர். அதிலும் அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லாததால், மீண்டும் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக, தலைவர் லட்சுமி அறிவித்தார்.
'கொரோனா காலத்திற்கு பின், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் பஸ்களின் வருகை பாதியாக குறைந்துள்ளது. ஏலத்தொகையும் அதிகமாக இருப்பதால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஏலத்தொகையை குறைத்தால் மட்டுமே ஏலம் எடுக்க முன் வருவார்கள்' என, ஏலம் எடுக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.