/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போது நெல் உற்பத்தி அதிகம்: பன்னீர் செல்வம்
/
அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போது நெல் உற்பத்தி அதிகம்: பன்னீர் செல்வம்
அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போது நெல் உற்பத்தி அதிகம்: பன்னீர் செல்வம்
அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போது நெல் உற்பத்தி அதிகம்: பன்னீர் செல்வம்
ADDED : அக் 23, 2025 01:24 AM
''அ.தி.மு.க., ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல் மணிகள் இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: பழனிசாமி ஆட்சியில், ஒரு நாளைக்கு 600 முதல் 700 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன; இப்போது, நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில், சாலைகளில் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் முளைப்பெடுத்து, நாற்று நடும் அளவிற்கு வளர்ந்தன. இப்போது, சிறிய அளவில் தான் நெல்மணிகள் முளைத்துள்ளன.
முன்பெல்லாம் திறந்தவெளியில், லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்; இப்போது கிடங்குகளிலும், சர்க்கரை ஆலை குடோன்களிலும் பாதுகாப்பாக அடுக் கப்பட்டு உள்ளன.
சேலம், மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்பட்டது, 1.80 லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கி, குறுவை தொகுப்பு திட்டத்தை, 214 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தியதால், விவசாயிகள் அதிகளவில் சாகுபடிசெய்துள்ளனர்.
இதனால், 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முதல் சுற்றிலேயே திடீரென்று பெய்து வருகிறது.
இயற்கையை குற்றம் சொல்ல முடியாது. இருப்பினும், நெல் கொள்முதல் பணிகள் துரிதமாக நடக்கின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சொற்ப அளவில் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. எடுத்தவுடன் கொள்முதல் செய்ய முடியாது.
முதலில், 'டோக்கன்' பெற வேண்டும்; நெல்மணிகளை துாற்ற வேண்டும்; எடை போட வேண்டும்; அதன் பின் தான் கொள்முதல் பணிகள் முடியும்.
அதற்கு தேவையான சுமை துாக்கும் தொழிலாளர்கள், இயந்திரங்கள் வேண்டும். ஈரப்பதம், குப்பை எல்லாம் பார்க்காமல் தனியார் நெல் கொள்முதல் செய்வர்.
ஒரு ஊரில், 1,000 நெல் மூட்டைகள் இருந்தால், அதில், 75 சதவீத மூட்டைகளை தனியார் வாங்கி விடுவர்; இப்போது அவர்கள் வாங்குவதில்லை. அரசிடம் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் வருகின்றனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுகிறது. மக்களுக்கு இரும்பு சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
நமது நிருபர்