/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை விபத்தில் பெயின்டர் உயிரிழப்பு
/
சாலை விபத்தில் பெயின்டர் உயிரிழப்பு
ADDED : பிப் 05, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கிழக்குபள்ளிப்பட்டி, கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் பெரியண்ணன், 48; பெயின்டிங் தொழிலாளி. இவர், நேற்று இரவு, 7:45 மணிக்கு வேலை முடிந்து செட்டிக்குட்டைமேடு வழியாக எலிமேடு பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த தனியார் பஸ், நேருக்குநேர் மோதியதில் பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.