தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பெயின்டர் கொலை வழக்கு: 2 பேர் கைது

பெயின்டர் கொலை வழக்கு: 2 பேர் கைது

பெயின்டர் கொலை வழக்கு: 2 பேர் கைது


ADDED : அக் 30, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் அடுத்துள்ள சிலுவம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 44; பெயின்டர். இவர், சில நாட்களுக்கு முன், மரூர்பட்டி ஏரிக்கரையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், நல்லிபாளையத்தை சேர்ந்த சதீஷ், 27, சேலம் ரோடு, முருகன் கோவில் பகுதியை சேர்ந்த ரித்திஷ், 19, ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இவர்களில் சதீஷ், ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ரித்திஷ் வேலை செய்து வருகிறார். இறந்த செந்தில்குமார், பெயின்டிங் வேலை செய்து வருவதால், சதீஷ் உடன் நட்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பணம், 40,000 ரூபாயுடன் செந்தில்குமார் வந்ததுள்ளார். அவருடன் அப்போது இருந்த சதீஷ், ரித்திஷ் இருவரும் வந்துள்ளனர். செந்தில்குமாரிடம் இருந்த பணத்தை சதீஷ், ரித்திஷ் இருவரும் கேட்டுள்ளனர்.

அவர் கொடுக்க மறுக்கவே, இருவரும் சேர்ந்து, செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை பிடுங்கி உள்ளனர். அப்போது நிலைதடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்துள்ளார். அதில் கல்லில் தலைபட்டு, படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இப்படியே விட்டு சென்றால் பணத்தை பிடுங்கியதை வெளியே சொல்லிவிடுவார் என எண்ணி, அருகில் கிடந்த கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்.பெயின்டர் இறந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த நாமக்கல் போலீசார் சதீஷ், ரித்திஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமையில், நேற்று காலை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. 9 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். ஒன்றியத்தில் உள்ள, 11 ஊராட்சிகளில், 6 ஊராட்சிகள் ராசிபுரம் நகராட்சியுடனும், 5 ஊராட்சிகள் பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மன்ற கூட்டம் நடந்த அரங்கிற்கு, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுவுடன் கூட்ட அரங்குக்கு சென்றனர். கூட்ட அரங்கில் வெளிப்புறத்தில் பொதுமக்கள் மனுக்களுடன் நின்று கொண்டிருந்தனர். ஆனால், கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

இதனால், பொதுமக்கள் சத்தம்போட தொடங்கினர். தகவலறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து பொதுமக்களிடம் பேசினார். மனுவை பி.டி.ஓ.,விடம் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டார். மனுவவை, பி.டி.ஓ.,விடம் கொடுத்தனர். 11 ஊராட்சிகளை நகராட்சி, டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கும் தீர்மானத்தை கைவிடக் கோரி பொதுமக்கள் கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us