/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு
/
பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு
ADDED : பிப் 17, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்,: தைப்பூச விழாவை யொட்டி, சேலம் மாவட்டம், இடைப்பாடியிலிருந்து முருக பக்தர்கள் காவடியுடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். வழிபாடு முடிந்து, குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் வழியாக, நேற்று வந்தனர். அவர்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த அன்னதான குழுவினர், மேள தாளங்களுடன் சிறப்பான வரவேற்பளித்தனர். 400 காவடிகளும் ஒரே இடத்தில் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் வரிசையாக நின்று விபூதி பிரசாதம் வாங்கினர். இந்த விழாவை காண பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

