/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்சாயத்தில் பனை விதை நடும் பணி
/
டவுன் பஞ்சாயத்தில் பனை விதை நடும் பணி
ADDED : செப் 22, 2024 06:38 AM
நாமகிரிப்பேட்டை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் கீழ் நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., முதல் கட்டமாக, 2 லட்சம் பனை விதைகளை நட திட்டமிட்டுள்ளனர். நீர்நிலைகள், குட்டைகள் மற்றும் அக்கலாம்பட்டி, அரியாகவுண்டம்பட்டி ஏரிகள், அதை சார்ந்துள்ள பகுதிகளிலும் பனை விதைகள் நடும் பணி, நேற்று நடந்தது.
இதில், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பழகன், இ.ஓ., ஆறுமுகம், துப்புரவு அலுவலர் லோகநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் காளியப்பன், வார்டு கவுன்சிலர்கள் சுரேஷ், ராமலிங்கம், கனகவல்லி, தீபா, மணிக்குமார், சாந்தி, நல்லம்மாள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும், துாய்மை பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.