/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாலுகா ஆபீஸ் வளாகத்தில் பனைவிதை நடும் நிகழ்ச்சி
/
தாலுகா ஆபீஸ் வளாகத்தில் பனைவிதை நடும் நிகழ்ச்சி
ADDED : அக் 29, 2025 01:27 AM
குமாரபாளையம், தமிழக அரசின், ஆறு கோடி பனை விதை நடும் பணியில், தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழக தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழக பசுமை இயக்கம், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தளிர்விடும் பாரதம் சார்பில், குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதை நடும் பணி நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, குமாரபாளையம் தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பனை விதை நடப்பட்டது. துணை தாசில்தார் செல்வராஜ், வி.ஏ.ஓ., அரசு, குப்பாண்டபாளையம் பஞ்., முன்னாள் தலைவர் கவிதா, சமூக ஆர்வலர் சித்ரா ஆகியோர் பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தனர். அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ., நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, ஆசிரியைகள் ஜாய்ஸ் அருள் செல்வி, ராணி, பள்ளி மாணவ, -மாணவியர் பங்கேற்றனர்.

