ADDED : நவ 13, 2026 05:41 AM
நாமக்கல்:'நாமக்கல்
கால்நடை மருத்துவக்கல்லுாரியில், இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற
பஞ்சகவ்யா, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது' என, முதல்வர்
செல்வராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்
கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இயற்கை விவசாயத்திற்கு உகந்த
பஞ்சகவ்யா பால், தயிர், சாணம், கோமியம் மற்றும் நெய் போன்ற, பசு
மாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்கள் கொண்டு, தரமாக
தயாரிக்கப்படுகிறது. இதை, இயற்கை உரமாக தண்ணீரில் கலந்து
பயிர்களுக்கு பாய்ச்சலாம். துணியில் வடிகட்டி பயிர்கள் மீது
தெளிக்கலாம். இதை பயன்படுத்துவதன் மூலம், பயிர்கள் அதிக நோய்
எதிர்ப்பு தன்மையை பெறுவதுடன் பூக்கள், தரமான காய்கள் மற்றும் கனிகள்
போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கலாம். விவசாயிகள், ஒரு லிட்டர்,
100 ரூபாய்க்கு பஞ்சகவ்யாவை வாங்கி, நெல், காய்கறி பயிர்,
தோட்டக்கலை பயிர் மற்றும் மரங்கள் போன்றவற்றிக்கு உபயோகித்து
பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
