ADDED : மார் 14, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், மாவட்ட தலைநகரங்கள் மட்டுமின்றி, கிரா-மங்கள், டவுன் பஞ்., பகுதிகளிலும் மக்கள் அச்சமின்றி ஓட்ட-ளிக்கும் வகையில், துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன்படி, எருமப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில், துணை ராணுவத்தினர், போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
