தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாவட்ட எல்லை பகுதியில் துணை ராணுவம் 'கிடுக்கி'

மாவட்ட எல்லை பகுதியில் துணை ராணுவம் 'கிடுக்கி'

மாவட்ட எல்லை பகுதியில் துணை ராணுவம் 'கிடுக்கி'


ADDED : ஏப் 02, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம், மாவட்ட எல்லையான, காளிப்பட்டி பகுதியில் துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல், 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்க பணம், விலை உயர்ந்த பரிசு பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளது.

அதன்படி, சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான காளிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். துணை ராணுவப்படையினர், போலீசார் அந்த வழியாக செல்லும் கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் சந்தேகப்படும்படியான வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us