ADDED : பிப் 24, 2026 10:06 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நரவலுார் பஞ்., தளிகை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட என்.தொட்டிபாளையத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரேஷன் கடை கட்டப்பட்டது. அதையடுத்து, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அட்மா குழு தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணை பதிவாளர் சரவணன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ராஜேஸ்வரி, தியாகராஜன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்று, பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொதுவினியோக திட்ட பொருட்களை வழங்கினார்.
