/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாராக மாறிய நிழற்கூடம் பயணியர் செல்ல தயக்கம்
/
பாராக மாறிய நிழற்கூடம் பயணியர் செல்ல தயக்கம்
ADDED : ஏப் 29, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் புறவழிச்சாலை சேரும் பகுதியில் நிழற்கூடம் உள்ளது. பகலில் நிழற்கூடமாக பயன்படுத்தும் நிலையில், இரவில், 'குடி'மகன்கள் பாராக பயன்படுத்தி  வருகின்றனர். சாப்பிடுவது, குடிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இங்கேயே செய்து வருகின்றனர்.
இரவு நேரத்தில், இந்த பக்கம் பயணிகள் வருவதே இல்லை. மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால், பகல் நேரத்தில் செல்லும் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இரவில் இப்பகுதியில், போலீசார் ரோந்து பணி மேற்கொள்வதுடன், நிழற்கூடங்களில் மது அருந்துவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

