/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளியையொட்டி 3 நாட்கள் விடுமுறை பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் படையெடுப்பு
/
தீபாவளியையொட்டி 3 நாட்கள் விடுமுறை பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் படையெடுப்பு
தீபாவளியையொட்டி 3 நாட்கள் விடுமுறை பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் படையெடுப்பு
தீபாவளியையொட்டி 3 நாட்கள் விடுமுறை பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் படையெடுப்பு
ADDED : அக் 18, 2025 01:29 AM
நாமக்கல், தீபாவளி பண்டிகையையொட்டி, மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊருக்கு செல்வதற்காக நாமக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு பயணிகள் படையெடுத்தனர். அதனால், அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும், 20ல், கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லுாரி, அரசின் அனைத்து துறைகளுக்கும், இன்று முதல், வரும், 20 வரை, மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடுவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என அனைவரும், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
அதற்காக நாமக்கல் - சென்னை, 20, நாமக்கல் - திருச்சி, 20, நாமக்கல் - துறையூர், 20, நாமக்கல் - திண்டுக்கல், 15 என, மொத்தம், 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க, பயணிகள் முண்டியடித்து செல்வதை காணமுடிந்தது. நாமக்கல்லில் இருந்து சேலம், திருச்சி, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில், கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ்சிற்குள் நின்று கொண்டும், படியில் தொங்கியபடியும் பயணிகள் சென்றனர்.
அதேபோல், கார், இரு சக்கர வாகனங்களில், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வோரும் அதிகம் காணப்பட்டனர். அவர்கள், நாமக்கல் நகரை கடந்து சென்றதால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சேலம் சாலை தொடங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.