/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நடு வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
/
நடு வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
நடு வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
நடு வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
ADDED : மே 28, 2024 07:10 AM
பள்ளிப்பாளையம் : நடுவழியில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பள்ளிப்பாளையம் எஸ்.பி.பி., காலனி முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரை உள்ள வழித்தடத்தில், ஒன்றாம் நெம்பர் அரசு டவுன் பஸ் செல்வது வழக்கம். நேற்று காலை, 10:15 மணிக்கு, எஸ்.பி.பி., காலனியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட அரசு டவுன் பஸ், காவிரி ஆர்.எஸ்., பஸ் ஸ்டாப்புக்கு வந்தது.பஸ் ஸ்டாப்புக்கு வந்தவுடன், திடீரென பஸ்சின், 'செல்ப்' மோட்டார் பழுதாகி நடுவழியில் பஸ் நின்றது. பழுதை சரி செய்ய டிரைவர் முயன்றும் முடியவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். வேறு வழியின்றி, 10-க்கும் மேற்பட்ட பயணிகள், 15 நிமிடத்திற்கு மேலாக, முன்னும், பின்னும் தள்ளி ஒரு வழியாக ஸ்டார்ட் செய்தனர். அதன் பின் பஸ் புறப்பட்டு சென்றது.