/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜி.ஹெச்.,ல் நோயாளி துாக்கிட்டு தற்கொலை
/
ஜி.ஹெச்.,ல் நோயாளி துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 18, 2025 01:44 AM
நாமக்கல், நாமக்கல் அடுத்த ரங்கப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 52. கோழி முட்டை ஏற்றிச் செல்லும் வண்டியில் லோடுமேன். இவர் கடந்த, 14ல், மிளகாய்பொடி மற்றும் எறும்பு பவுடரை கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நல்லிபாளையம் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ரமேஷ் மதுபோதையில், அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், நல்லிபாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் மன
வேதனையில் இருந்த ரமேஷ், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.