sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 200 குடும்பத்திற்கு பட்டா வழங்கல்

/

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 200 குடும்பத்திற்கு பட்டா வழங்கல்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 200 குடும்பத்திற்கு பட்டா வழங்கல்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 200 குடும்பத்திற்கு பட்டா வழங்கல்


ADDED : ஏப் 13, 2025 04:13 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், மூலப்பள்ளிப்பட்டி கிராமத்தில், நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், 1.13 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை வழங்கி பேசினார்.

இதில், தமி-ழக அரச கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்-களிடம் கேள்வி கேட்டு, அவர்கள் பதில் சொன்ன பின் விளக்கம-ளித்து பேசினார். இலவச பேருந்து, காலை உணவு திட்டம், உயர்-கல்வி பெண்களுக்கு கல்வி உதவித்தொகை, அரசு பள்ளி மாண-வர்களுக்கான உதவித்தொகை, நகைக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார்.தொடர்ந்து, 32 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 102 பேருக்கு இ-பட்டா, 23 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல், 37 பேருக்கு நத்தம் தோராய பட்டா, நான்கு பேருக்கு பட்டா மாறுதல், இரண்டு பேருக்கு உட்பிரிவு மாறுதல் என, 200 குடும்-பங்களுக்கு பட்டா வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்-கான வண்டிகள், புதிய ரேஷன் அட்டை, மகளிர் சுய உதவிக்-கடன், பவர் டிரில்லர் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை பய-னாளிகளுக்கு வழங்கினார். கூட்டுறவுத்துறை ஜே.ஆர்., அருளரசு, தாசில்தார் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், நாமகிரிப்பேட்டை துணைத்தலைவர் அன்பழகன், ஆர்.புதுப்பட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, 16 லட்சம் ரூபாயில் கட்டப்-பட்ட அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us