/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகர்ப்புற வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தில் ஆவணங்கள் சரியாக இருந்தால் பட்டா: கலெக்டர்

ADDED : ஜூன் 01, 2025 01:11 AM
நாமக்கல், நாமக்கல்
மாவட்டம் முழுவதும், நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும்
சிறப்பு திட்டத்தின் கீழ், வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக,
கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின்,
நகர்ப்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டாக்கள் ஏதுமின்றி,
ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்தாண்டுகளுக்கு
மேல் வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார
மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்க
அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும், அந்தந்த
மாவட்டங்களில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், கள ஆய்வு மேற்கொண்டு,
பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல்
மாநகரட்சி, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற
வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், பட்டா வழங்க
விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்திருந்த நபர்களின்
குடியிருப்புகளுக்கு, கலெக்டர் உமா, நேற்று நேரில் சென்று ஆய்வு
மேற்கொண்டார்.
அப்போது, குடியிருப்புவாசிகளிடம், பல
ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது,
வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தார். தொடர்ந்து,
''ஆவணங்கள் சரியாக இருந்தால், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு
வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை
வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், விரைவில் பட்டா வழங்கப்படும்,'' என
உறுதி அளித்தார்.