/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி: மா.செ., அழைப்பு
/
கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி: மா.செ., அழைப்பு
கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி: மா.செ., அழைப்பு
கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி: மா.செ., அழைப்பு
ADDED : ஆக 06, 2025 01:04 AM
நாமக்கல், 'முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாளை அமைதி பேரணி நடக்கிறது. அதில், கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு நாளில், அவரை போற்றும் வகையில், நாளை காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையில் இருந்து, பரமத்தி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வரை, அமைதி பேரணி நடக்கிறது.
தொடர்ந்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாநகர உறுப்பினர்கள், கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.