/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் அருகே மயான பிரச்னையில் சுமுக முடிவு
/
பள்ளிப்பாளையம் அருகே மயான பிரச்னையில் சுமுக முடிவு
பள்ளிப்பாளையம் அருகே மயான பிரச்னையில் சுமுக முடிவு
பள்ளிப்பாளையம் அருகே மயான பிரச்னையில் சுமுக முடிவு
ADDED : ஜூலை 14, 2025 07:15 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த உப்புபாளையம் பகுதியில் இறந்தவர்களின் உடலை அங்குள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்தனர்.
அவர்களுக்கு, வேறு இடத்தில் பல ஆண்டுக்கு முன் மயானம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் உப்புபாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, 95, இயற்கை எய்தினார். நேற்று மதியம், இறந்தவர் உடலை எடுத்துக்கொண்டு, ஒதுக்கப்பட்ட மயானத்தில் வைத்து எரியூட்ட தயாராகினர்.
அப்போது, மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம், தங்கள் பட்டா நிலத்தில் இருப்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, எங்களுக்கு சொந்தமான இடத்தில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., கிருஷ்ணன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, தாசில்தார் சிவகுமார், ஆகியோர் இருதரப்பிலும் பலமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், இரவு, 9:00 மணிக்கு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில், நீதிமன்ற தீர்ப்புபடி நடப்பது எனவும், அதுவரை பழைய மயானத்தை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இறந்த பழனிசாமியின் உடலை, பழைய மயானத்திற்கு எடுத்துச்சென்று எரியூட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.