தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கடலை அறுவடை தீவிரம்

கடலை அறுவடை தீவிரம்

கடலை அறுவடை தீவிரம்


ADDED : பிப் 28, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை; நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், கார்த்திகை பட்டத்தில், 2000 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். இதில், பெரும்பாலும் மானாவாரியாகவே கடலை சாகுபடி செய்திருந்தனர். கடந்த, இரண்டு நாட்க-ளுக்கு முன், நாமகிரிப்பேட்டையில் மழை பெய்-தது. இந்த மழையை பயன்படுத்தி, மானாவாரி நிலங்களில் பயிரிட்டிருந்த கடலைகளை அறு-வடை செய்யும் பணியில் விவசாயிகள், நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.

தற்போது அறுவடை செய்யப்படும் பச்சைக்க-டலை, 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 3,200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நன்கு காய்ந்த கடலை, 46 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 6,000 ரூபாய் வரை விலை போகிறது. கடலைகளை அறுவடை செய்து விற்-பனைக்கு கொண்டு செல்லும் பணி மும்முரமாக நடந்தது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'பச்-சைக்கடலை ஒரு மூட்டை, 3,500 ரூபாய் வரை விலை கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், தற்போது விலை சற்றே குறைந்திருந்-தாலும், இது ஓரளவுக்கு லாபகரமான விலைதான். மழையால் அறுவடை பணி எளிதா-கியது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us