/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்ட் வராத பஸ்களுக்கு அபராதம்
/
பஸ் ஸ்டாண்ட் வராத பஸ்களுக்கு அபராதம்
ADDED : செப் 27, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட், சேலம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஒரு சில பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல், சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வெளியே நிற்பதா, உள்ளே நிற்பதா என தெரியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து வந்த புகார் அடிப்படையில், நேற்று பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ்களை மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,முருகேசன், காவலர் தனசேகரன் ஆகியோர் வழி மறித்து, அபராதம் விதித்தனர். பின், பஸ்களை பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று வர வேண்டும் என, அறிவுறுத்தினர்.