/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வூதியர் சங்கம் மனித சங்கிலி போராட்டம்
/
ஓய்வூதியர் சங்கம் மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், ;மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல்லில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் காளியப்பன், அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனித சங்கிலி போராட்டத்தில், 'ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.