ADDED : டிச 19, 2024 07:15 AM
நாமக்கல்: நாமக்கல் கவின் கிஷோர் மண்டபத்தில், அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்கம், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசி-ரியர் நலச்சங்கம், பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்கம் உள்-ளிட்ட மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட கிளை சார்பில், ஓய்வூதியர் தின விழா நடந்தது.
ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில உதவி தலைவர் மணி தொடக்க உரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதிய-மான, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்-டோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. மாவட்ட பொருளாளர் அன்பழகன், சங்க மாவட்ட செய-லாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.