/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் நியமனத்தால் மக்கள் மகிழ்ச்சி
/
தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் நியமனத்தால் மக்கள் மகிழ்ச்சி
தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் நியமனத்தால் மக்கள் மகிழ்ச்சி
தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் நியமனத்தால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 30, 2025 01:25 AM
ராசிபுரம், மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சப்-டிவிசனில் வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு சேர்த்து, ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் பணியில் உள்ளார். இவருடைய அலுவலகம் பேளுக்குறிச்சியில் உள்ளது. ஆனால், மற்ற இரண்டு ஸ்டேஷன்களும், சேலம் மாவட்ட எல்லையில் உள்ளன. மங்களபுரம் ஸ்டேஷன் பேளுக்குறிச்சியில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது. மங்களபுரம் ஸடேஷன் எல்லை அங்கிருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்கு உள்ளது.
இது சேலம் மாவட்ட எல்லையான மல்லியக்கரை வரை பரவியுள்ளது. இதனால், திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர்கள், 30 கி.மீ., துாரத்தில் உள்ள பேளுக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல், போலீசாருக்கும் இது பெரும் பிரச்னையாக உள்ளது.
இதேபோல், கொல்லிமலையில் உள்ள செங்கரை, வாழவந்திநாடு ஸ்டேஷனுக்கு உரிய இன்ஸ்பெக்டர் அலுவலகம், சேந்தமங்கலம் ஸ்டேஷனில் உள்ளது.
முக்கியமாக கொல்லிமலை, செங்கரை பகுதியில் பிரச்னை என்றால், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர், 50 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். எனவே, நீண்ட நாட்களாக பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, செங்கரை, வாழவந்திநாடுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதேபோல், எருமப்பட்டி, மல்லசமுத்திரம், மொளசி, வெப்படை ஸ்டேஷன்களுக்கும் தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி, நமது நாளிதழில் கடந்த மே, 9ல் வெளியானது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மேற்குறிப்பிட்ட ஆறு ஸ்டேஷன்களும் தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தரம் உயர்த்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கான இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வாழவந்திநாடு, மங்களபுரம், வெப்படை ஆகிய ஸ்டேஷன்களுக்கான இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் பணியாற்றி வந்த சங்கீதா வெப்படைக்கும், இந்திரா மங்களபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சேலத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய செல்வ லஷ்மி, பதவி உயர்வில் வாழவந்திநாடு ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

