/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குளிர் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவஸ்தை
/
குளிர் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவஸ்தை
ADDED : நவ 03, 2024 02:29 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன், வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு படிப்படியாக குறைந்து வந்தது. காலநி-லையில் மாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் சகஜ நிலைமைக்கு திரும்புவது வழக்கம். மேலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சில மாதங்களாக மழை மற்றும் பனியால் உடலில் போட்டுக்கொள்ளும் வெம்மை ஆடைகளை களைந்து விட்டு சாதாரண உடைகளுக்கு மாறுவது வழக்கம்.
அதேபோல், கடந்த ஒரு வாரமாக வெண்ணந்தூர் மற்றும் சுற்று-வட்டார பகுதியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிக-மாக இருந்தது. அதே சமயம் கடந்த மூன்று நாட்களாக காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.