/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றங்கரையில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதி
/
ஆற்றங்கரையில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதி
ஆற்றங்கரையில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதி
ஆற்றங்கரையில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் மக்கள் அவதி
ADDED : அக் 03, 2025 01:58 AM
பள்ளிப்பாளையம் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே களியனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவத்திபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை, துாய்மை பணியாளர்கள், ஆவத்திபாளையம் பகுதி ஆற்றங்கரையில் கொட்டுகின்றனர்.
மேலும் சமயசங்கிலி உள்ளிட்ட பல பகுதியிலும் இருந்தும் குப்பை, கழிவுகள் இந்த ஆற்றங்கரையோரத்தில் கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பை, கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் அதிகளவில் சேர்ந்துவுடன் தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக மாறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் புகை செல்வதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் புகையால் சுற்று சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
மேலும் கொட்டப்படும் குப்பை, கழிவுகள், மற்றும் தொழிற் சாலைகழிவுகள் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது.
எனவே ஆற்றங்கரையில் குப்பை, கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், இது குறித்து எச்சரிக்கை பலகை வைக்கவும், சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.