/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு
/
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு
ADDED : ஜூலை 26, 2025 01:28 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், பாலமேடு பஞ்., முனியப்பம்பாளையம் அருந்ததியர் தெருவில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதுவும் ஒரு குடும்பத்திற்கு, ஐந்து குடம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. வேறு வழியின்றி, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று ஒன்று திரண்டு மல்லசமுத்திரம், - வையப்பமலை சாலையில் அமைந்துள்ள ஆத்துமேடு பஸ் ஸ்டாப் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மண்டல பி.டி.ஓ., வெங்கடாசலம், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோரை, மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம், 'ஊருக்குள் செல்லும் குடிநீர் குழாயில், சிலர் சட்டத்திற்கு புறம்பாக குழாய்களை அமைத்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் எங்கள் பகுதிக்கு சீரான தண்ணீர் கிடைப்பதில்லை. இதை அகற்றி, தினமும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்' என முறையிட்டனர். இதையடுத்து, நான்கு குடியிருப்புகளில் முறைகேடாக தண்ணீர் குழாய்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் சீரான தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.