/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
/
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : நவ 15, 2024 02:19 AM
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற
அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
நாமக்கல், நவ. 15-
நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியில், 100 நாள் வேலை கேட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி உள்ளது. அங்கு செயல்படும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று காலை, 10:00 மணிக்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். கடந்த இரு மாதங்களாக, வேட்டாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செல்லப்பா காலனி, தாதம்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மட்டுமே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்குவதாகவும், தங்களுக்கு வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதால், போதிய வருமானம் இன்றி தவிப்பதாக கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில், அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.