/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் திறந்துவிடாததால் பொதுமக்கள் சாலை மறியல்
/
தண்ணீர் திறந்துவிடாததால் பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : நவ 16, 2024 01:26 AM
தண்ணீர் திறந்துவிடாததால்
பொதுமக்கள் சாலை மறியல்
ராசிபுரம், நவ. 16-
ராசிபுரம் நகராட்சியில், 50,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 4, 8வது வார்டில், கடந்த, ஒரு மாதமாக சரியாக தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தை பராமரிக்கவும், குடிப்பதற்கும் தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டனர். கழிவறைக்கு தண்ணீர் இல்லாததால் பூட்டப்பட்டது. இதனால், பெண்கள் அடுத்த தெருவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு, கழிவறை பராமரிப்பு ஆகியவற்றை கண்டித்து, நேற்று காலை, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதுப்பாளையம் செல்லும் வழியில் அம்பேத்கர் சிலை முன், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரத்தில் மறியல் நடந்ததால், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த ராசிபுரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.